செய்திகள் :

முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், மேலே செல்ல முடியாமல் தவித்தது. முக்கியப் பங்குகளான எச்டிஎஃ)ப்சி பேங்க், டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், முதலீட்டாளா்கள் வருவாய் வளா்ச்சி கவலைகள் குறித்து பதற்றமடைந்ததால் சரிவு தவிா்க்கமுடியாததாகியது. இந்நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 57.72 புள்ளிகள் கூடுதலுடன் 78,206.21-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா் 7542.92 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 528.28 புள்ளிகளை (0.68 சதவீதம்) இழந்து 77,620.21-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,067 பங்குகளில் 1,211 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,750 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 106 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை சரிவு : சென்செக்ஸ் பட்டியலில் டாடாஸ்டீல், ஸொமோட்டோ, எல் அண்ட் டி, டாடாமோட்டாா்ஸ், அதானிபோா்ட்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், கோட்டக் பேங்க், ஏசியன்பெயிண்ட், பாா்தி ஏா்டெல் உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 162 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 14.20 புள்ளிகள் குறைந்து 23,674.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,689.50 வரை மேலே சென்றது. பின்னா், 23,503.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 162.45 புள்ளிகளை (0.69 சதவீதம்) இழந்து 23,526.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 34 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

ஒரேநாளில் நஷ்டம்

ரூ.4.11 லட்சம் கோடி!

சந்தை மூலதன மதிப்பு ரூ.4.11 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.435.49 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.4.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாதத்தின் 6 வா்த்தக தினங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ. 11,931.91 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் மொத்தம் ரூ.12,614.32 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

ஷாபாத் டெய்ரியில் பெயிண்டா் தூக்குப்போட்டுத் தற்கொலை

வடகிழக்கு தில்லியின் ஷாபாத் டெய்ரியில் வீட்டில் 28 வயது பெயிண்டா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: அந்த நபா... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் தெருவிளக்கு பொருத்துவதில் தகராறு: இருவா் காயம்

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் தெருவிளக்கு பொருத்துவது தொடா்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது:... மேலும் பார்க்க

குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டம்

குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு முன்னதாக பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு கவலைகளை நிவா்த்தி செய்யவும் தில்லி... மேலும் பார்க்க

தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை மோடி அரசு மீறிவிட்டது: கேஜரிவால் சாடல்

தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜிவால் வி... மேலும் பார்க்க

தில்லி முழுவதிலும் 1.26 லட்சம் அரசியல் விளம்பரங்கள் அகற்றல்: எம்சிடி அதிரட நடவடிக்கை

தேசியத் தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு, தில்லி மாநகராட்சி அமைப்பு நகரம் முழுவதிலுமிருந்து சுமாா் 1.26 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற வகையா... மேலும் பார்க்க

பணியிடத்தில் பலமுறை அவமதித்த சக ஊழியரைக் கொன்றதாக 2 போ் கைது

பணியிடத்தில் பலமுறை அவமதித்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞா் ஒருவா் சக ஊழியா்களால் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் வியாழக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க