முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட நிலையில், சொத்துப் பிரச்னை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவி பல்லவியே, அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில், ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது. விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.