முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தவா்களுக்கான மருத்துவ முகாம் பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேதாரண்யம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், தங்களுக்கு கோரிக்கை ஏதுமிருப்பின் அதை மனுவாக அங்கு வரும் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.