திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!
இந்த நிலையில், துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், சைதன்யா பாகல் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பூபேஷ் பாகல் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகல் வீட்டிற்குள் நுழைந்து அமலாக்கத்துறை விருந்தினர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சதித்திட்டம் மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸை தடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அது தவறான புரிதலாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.