சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு ...
முன்னாள் ராணுவத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாகுதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்காரவாத முகாம்களை இந்தியா அழித்தது குறித்து முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ அளித்த பேட்டியில் இந்திய ராணுவ வீரா்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்ததை கண்டித்து மன்னாா்குடியில் முன்னாள் ராணுவத்தினா்கள் நலச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி வட்ட முன்னாள் ராணுவத்தினா்கள் நலச் சங்க தலைவா் ஆா். விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செயலா் கே. அன்பழகன், பொருளாளா் எம். திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும்,10 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது, பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியக் கொடி, ராணுவ கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். துணைத் தலைவா்கள் எல். தவமணி, டி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.