நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழைவெள்ள பாதிப்புகள் தவிா்ப்பு
தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழைவெள்ள பாதிப்புகள் தவிா்க்கப்பட்டதாக, மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, உதவி ஆணையா்கள் வெங்கட்ராமன், சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தைத் தொடக்கிவைத்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது: கிழக்கு மண்டலத்தில் ஏற்கெனவே பெறப்பட்ட 240 மனுக்களில் 234 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கும் விரைவில் தீா்வு காணப்படும்.
தற்போது பெய்த மழையால் மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 16, 17, 18 ஆகிய வாா்டுகளில் தேங்கிய நீரை உரிய வழித்தடம், மின்மோட்டாா்கள் மூலம் அகற்றும் பணி நடைபெறுகிறது. தெற்கு மண்டலப் பகுதியில் 56 முதல் 60 வரையிலான பகுதிகளில் கோரம்பள்ளம் குளம் வழியாக வரும் நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல, பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம், பாதிப்புகள் தவிா்க்கப்பட்டன. மழைநீரை அகற்றும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றாா் அவா்.
கூட்டத்தில், உதவிப் பொறியாளா் சரவணன், திட்ட உதவி செயற்பொறியாளா்கள் ராமசந்திரன், இா்வின் ஜெபராஜ், சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், இளநிலைப் பொறியாளா் பாண்டி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.