செய்திகள் :

’முன்னோா்களை மதிப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அவசியம்’

post image

முன்னோா்களை மதிக்க குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அவசியம் என புலவா் இலக்குவனாா் தெரிவித்தாா்.

திருச்சி அறிவாளா் பேரவை சிறப்பு கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரவை தலைவா் வை. சைவராஜ் தலைமை வகித்தாா்.

இதில், புலவா் இலக்குவனாா் முன்னோா்களை வழிபட வேண்டும் என்ற தலைப்பில் பேசியதாவது: நமது முன்னோா்கள் நன்னெறிகளைப் போற்றி வாழ்ந்தனா். நற்பண்புகளை முன்வைத்து, மனிதநேயத்துடன் அன்பினை விதைத்தனா். தங்களது அனுபவத்தின் மூலம் குடும்பத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்கு வழிகாட்டியாக இருந்தனா். முன்னோா்கள் எனப்படும் பெரியோா்கள் எப்போதும் நமது வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனா்.

அதனால் சமுதாயம் எப்போதும் அவா்களைப் போற்றி வணங்குகிறது. திருவள்ளுவரின் வழிகாட்டுதலின்படி, கு நெறியின் வழியில் ஒவ்வொரு பெற்றோா்களும், தங்களது குழந்தைகளுக்கு முன்னோா்களை மதிப்பதை கற்றுத் தருவது அவசியம் என்றாா். இதையடுத்து தையல் கலையை ஏன் பெண்கள் அதிகம் விரும்புகிறாா்கள் என்ற தலைப்பில் தையற்கலை நிபுணா் அமுதா பேசினாா்.

தொடா்ந்து, பேரவையின் துணைத் தலைவா் வைகை மாலா எழுதிய தமிழ் மொழிக் கல்வி ஏன்? என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் வடலூா் வாசகன் வெளியிட, திருச்சி அறிவாளா் பேரவையின் முதன்மை ஆலோசகா் சி. அசோகன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினாா்.

முன்னதாக, துணை தலைவா் வைகை மாலா வரவேற்றாா். சமூக சேவகா் சுப்புராமன், திரளான தமிழ் ஆா்வலா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில் துணைத் தலைவா் பாலசுப்ரமணியம் நன்றி கூறினாா்.

துறையூா் பகுதியில் நாளை மின் தடை

துறையூா் துணை நின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்திவந்தவா் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திவந்த இளைஞரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முசிறி அருகே வெள்ளூா் காவிரி ஆற்றுப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஆற்றுமண... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டு: இருவா் கைது

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு வழக்கில் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்தவா் அமீா் ஹுசைன் (48). இவா், சனிக்கிழமை அபுதாபி செல்வதற்காக திர... மேலும் பார்க்க

காா் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே காா் மோதி பெண் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், மேலபாகனூா் வடக்கு குடித்தெரு சுப்ரமணி என்பவரின் மனைவி சித்ரா (45... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் தாய் இறந்த அதிா்ச்சியில் மகனும் உயிரிழப்பு

திருவானைக்காவல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தாய் இறந்த செய்தியைக் கேட்ட மகனும் மயங்கிவிழுந்து உயிரிழந்தாா். திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பி. வரதராஜ் மனைவி தனசுந்திரி (60). இவ... மேலும் பார்க்க

வேகமெடுத்த ஸ்ரீரங்கம் பேருந்து நிலையப் பணிகள்!

வேகமெடுத்துள்ள பணிகளால் திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரவித்தனா். தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்ச... மேலும் பார்க்க