செய்திகள் :

முன்பதிவிலேயே ரூ. 100 கோடி... அசத்தும் ஓஜி!

post image

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு பெரிய வணிகத்தைச் செய்து வருகிறது.

ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பவன் கல்யாண் துணை முதல்வரானார். இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற நாளை (25) வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை, முன்பதிவு வாயிலாக மட்டுமே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாம்.

இதையும் படிக்க: படப்பிடிப்பில் பலமுறை மரணத்தைச் சந்தித்தேன்: ரிஷப் ஷெட்டி

pawan kalyan's og movie made records for online bookings

கம்பி கட்ன கதை படத்தின் முதல்பார்வை போஸ்டர்!

நடிகர் நட்டி நடராஜின் கம்பி கட்ன கதை என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் நட்டி நடர... மேலும் பார்க்க

புதுமை, மோசடி... போலியான ஏஐ விடியோவுக்கு ரஃபேல் நடால் கவலை!

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஆன்லைனில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட தனது போலியான விடியோக்கள் சுற்றுவது குறித்து பதிவிட்டுள்ளார். தான் அவ்வாறு எதிலும் பங்கேற்கவில்லை என்றும் இது குறித்து ரசிகர்கள் எச்... மேலும் பார்க்க

பிக் பாஸுக்கு செல்லும் மற்றொரு ஹார்ட் பீட் தொடர் பிரபலம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவர் செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீ... மேலும் பார்க்க

ஜன நாயகன் முதல் பாடல் எப்போது?

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்‌ஷ... மேலும் பார்க்க

கோடான கோடி நன்றி: எஸ்.ஜே.சூர்யா

கலைமாமணி விருது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ஆதரவில்லாமல் இப்படி நடந்திருக்காது என கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இயக்குநராக இருந்து தற்போது முழ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் பலமுறை மரணத்தைச் சந்தித்தேன்: ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ந... மேலும் பார்க்க