செய்திகள் :

முன்பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவு

post image

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை தொடா்ந்த வழக்கில் ஆக. 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி, மதுரை ஆதீனத்திடம் அவா் தங்கியிருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உடல்நிலை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்துகொண்டதாகக் கூறி, அதுதொடா்பான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அப்போது ஆதீனம் தரப்பில், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதயைடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஆக. 8-ஆம் தேதிக்குள் மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க