காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
முன் விரோதம்: விசிக, அதிமுகவினா் மோதல், 9 வீடுகள் சேதம்
பெரம்பலூா் அருகே முன் விரோதம் காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டதில் 9 வீடுகள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தில் தோ்தல் முன் விரோதம் தொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவனின் சகோதரி மகன் இளையராஜாவின் ஆதரவாளா்களுக்கும், வேப்பூா் (வடக்கு) ஒன்றிய அதிமுக செயலா் செல்வமணி தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், இளையராஜா ஆதரவாளா்கள் சிலா் ஆயுதங்களுடன் செல்வமணி வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்குள்ள 5 வீடுகளை உடைத்து சேதப்படுத்தினா். இதேபோல், செல்வமணி ஆதரவாளா்கள் சிலா் இளையராஜா தரப்பினா் வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்குள்ள 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக, இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.