Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
மும்பைக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை அணிக்காக லாலியன்ஸுவாலா சாங்தே 39-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, சக வீரா் நிகோஸ் கரெலிஸ் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இவ்வாறாக முதல் பாதியை மும்பை 2-0 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் மும்பை வீரா் சஹில் பன்வா் 66-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, ஈஸ்ட் பெங்காலின் கணக்கு தொடங்கியது. அந்த அணியின் டேவிட் லால்சங்கா 83-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 2-2 என சமன் ஆனது. விறுவிறுப்பான கடைசி தருணத்தில் மும்பையின் நிகோலஸ் கரெலிஸ் 87-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இறுதியில் மும்பை 3-2 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகளும் இத்துடன் 14 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மும்பைக்கு இது 6-ஆவது வெற்றி; ஈஸ்ட் பெங்காலுக்கு இது 8-ஆவது தோல்வி. அந்த அணிகள் முறையே 5 மற்றும் 11-ஆவது இடங்களில் உள்ளன.