செய்திகள் :

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

post image

மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை குழந்தையின் பாட்டி அவளை பள்ளியில் விட்டுச் சென்ற பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், சோர்வாக இருப்பதாகவும் உடல் முழுவதும் வலிப்பதாகவும் பொற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, போலீசில் புகார் அளித்தனர்.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

A four-year-old girl has allegedly been sexually assaulted at a well-known school in Mumbai, leading to the arrest of a female staffer, police said.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,342 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறை... மேலும் பார்க்க

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை: விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்... மேலும் பார்க்க