Roja Muthiah Library Vlog: லண்டன் British Library-க்கு சவால் விடும் ரோஜா முத்தைய...
மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?
மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.
இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 3 மாடிக் கட்டடத்தின் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
இதனால், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 20 -க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 7 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்ற தகவலின் அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.