பாமக உழவர் மாநாடு: 'நீரா பானம்; ஆக்கிரமிப்பு ஏரிகளை மீட்க தனி வாரியம்' - நிறைவேற...
மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றொரு உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர் என்று பெருநகர மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
‘நீல்கமல்’ எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தலமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்கு கடந்த டிச.18ஆம் தேதி சென்று கொண்டிருந்தது.
இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!
அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 14 போ் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.