`Santhosh Narayanan-ம் நானும் ஆடுனா அனல் பறக்கும்!' - Gana Muthu | Pa.Ranjith | ...
மும்பை: பன்றி என நினைத்துச் சுட்டதில் இருவர் பலி; மறைக்க முயன்ற மக்கள்; வசமாகச் சிக்கிய குற்றவாளிகள்
மும்பையின் மையப்பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மும்பையையொட்டி இருக்கும் பால்கர் மாவட்டத்திலும் அதிக அளவில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதிக்குள் அடிக்கடி பொதுமக்கள் சட்டவிரோதமாக வேட்டையாடச் செல்வது வழக்கம். அவர்கள் காட்டுக்குள் சென்று காட்டுப்பன்றியை வேட்டையாடி அங்கேயே சமைத்துச் சாப்பிடுவது வழக்கம்.
பால்கரில் உள்ள போர்ஷேதி வனப்பகுதிக்கு அகோலே மற்றும் ராவ்டே ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த ஒரு கும்பல் துப்பாக்கி, கத்தி மற்றும் சமையல் பாத்திரங்களுடன் காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்றனர். அவர்கள் காட்டுக்குள் சென்றதும் தனித்தனியாகப் பிரிந்து சென்று பன்றியைத் தேட ஆரம்பித்தனர். சிலர் மலை உச்சிப்பகுதிக்குச் சென்றனர். சிலர் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு காட்டுப்பன்றியின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
![காட்டுப்பன்றி](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/x34eolex/wild-boar-recipes-and-uses.jpg)
இரவு நேரம் என்பதால் காட்டுக்குள் யார் எங்கு இருக்கின்றனர் என்று தெரியாமல் இருந்தது. டார்ச் லைட்டையும் அடிக்காமல் சத்தம் போடாமல் காட்டுப்பன்றியின் வரவுக்காகக் காத்திருந்தனர். காட்டிற்குள் அவர்கள் பதுங்கி இருந்தபோது ஒரு வகையான சத்தம் வந்தது. உடனே பன்றி வந்துவிட்டதாகக் கருதி வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அவர் சுட்ட இடத்தில் வேட்டையாடச் சென்ற இரண்டு பேர் இருந்தனர். அவர்களைத்தான் பன்றி என நினைத்துத் தவறுதலாகச் சுட்டிருந்தனர்.
இதில் ரமேஷ்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மற்றொருவர் காயம் அடைந்தார். இறந்தவரைக் கிராமத்திற்குள் எடுத்துச்சென்றால் பிரச்னையாகிவிடும் என்று கருதி அவரது உடலைப் புதருக்குள் மறைத்துவைத்துவிட்டு காயம் அடைந்தவரை மட்டும் தங்களது கிராமத்திற்குத் தூக்கிச் சென்றனர்.
ஆனால் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்து சிகிச்சை கொடுத்தனர். இதில் இரண்டாவது நபரும் இறந்து போனார். இது குறித்து வெளியில் சொல்லாமல் தகனம் செய்துவிட்டனர். இந்த விவகாரத்தைக் கிராம மக்கள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் இச்சம்பவம் குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இது குறித்து விசாரித்தனர். அதோடு காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துப்பாக்கிச்சூட்டில் இறந்து போன ரமேஷ் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs