செய்திகள் :

``மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடுத்த முயற்சி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்..'' - அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் தி.மு.க விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

"தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி சேர்பவர்களின் சதவிகிதம் 51. ஆனால், இந்தியாவின் மொத்த சதவிகிதம் வெறும் 27 சதவிகிதம் தான். இதனை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், வரும் 2030-ம் ஆண்டுக்குள் உயர் கல்வி சேருபவர்களின் சதவிகிதத்தை 80 சதவிகிதமாக உயர்த்துவோம் என இலக்கு வைத்து முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். அதற்காக, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கல்வியில் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.

dmk meeting

ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது என்ன என்று சொல்வார்களா?. இதுவரை, வடமாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி சாதித்தது என்ன என்று சொல்வார்களா?. அப்படி எதுவும் இல்லை. ஆனால், இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி தமிழ்நாடு நிறைய சாதித்திருக்கிறது. அதனால், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு எடுத்த முயற்சிதான் நாடு முழுவதும் எதிரொலிக்கப் போகிறது. இப்போது, மராட்டிய மாநிலத்திலும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் வக்ஃபு சட்டத் திருத்தம்" என்றார்.

மாநில சுயாட்சி: அரசியல் செய்வது DMK-வா? BJP-அ? | Aazhi Senthilnathan Interview | MK Stalin | Modi

மாநில சுயாட்சி தமிழக அரசியலில் மீண்டும் விவாதமாகியிருக்கிறது. மாநில சுயாட்சி அரசியலை திமுக இப்போது முன்னெடுக்க காரணம் என்ன? அரசியல் செய்வது யார் என்பது குறித்து பதிலளிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் ஆழி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால் TB நோய் வருமா?

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால், நுரையீரல் தொற்று ஏற்படுமா... சாதா தண்ணீர் குடித்தால், தாகம் அடங்குவதில்லை. அதனால், தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டரை குடித்துவருகிறேன். திடீரென்று நுரையீரல... மேலும் பார்க்க

``450 நாள் ரெக்கார்டை பிரேக் செய்து, செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் இருப்பார்'' - வினோஜ் செல்வம்

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில்,புதுக்கோட்டை நிகழ்ச்சியில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம்அதிம... மேலும் பார்க்க

``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?

கும்ப மேளாவில் நடக்கவிருந்த அரசியல் குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, "கும்பமேளாவில் ... மேலும் பார்க்க

Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?

பாடி பாசிட்டிவிட்டி அனைவரும் அறிந்ததுதான். என் உடல் எப்படியிருந்தாலும் அதை நான் நேசிப்பேன், கொண்டாடுவேன் என்பதுதான் பாடி பாசிட்டிவிட்டி. தற்போது 'பாடி நியூட்ராலிட்டி'யும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உ... மேலும் பார்க்க