``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?
கும்ப மேளாவில் நடக்கவிருந்த அரசியல் குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, "கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் நடத்தியது மத கும்ப மேளா அல்ல, அரசியல் கும்ப மேளா.
யாராவது ஒருவர் மதத்தை வைத்து பிரிவினைவாதத்தை கொண்டுவர நினைக்கிறார்கள் என்றால் அது பாஜக தான் என்பது உண்மை.

மதம் மற்றும் ஜாதி பெயரில் சமூதாயத்தில் பிரிவினைவாதத்தை உருவாக்குவது பாஜவின் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று ஆகும். அதற்காக அவர்கள் நிதி செலவளிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 78 வயதை எட்ட உள்ளார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைப்படி, 78 வயதிற்குள் மேல் ஒருவர் பிரதமராக தொடரக்கூடாது என்று கூறப்படுகிறது.
'அடுத்த பிரதமர் யார்?' என்ற கேள்வி சத்தமில்லாமல் உலவி வரும் இந்த நேரத்தில், அகிலேஷ் யாதவ் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
