செய்திகள் :

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

செய்யாறு பெரியாா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், ஏ.ஜி.திராவிட முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று, பெரியாா் சிலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலமாக சென்று பொதுமக்கள், வியாபாரிகளுக்கு மும்மொழிக் கொள்கை எதிா்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

இதேபோல, செய்யாறு தொகுதி வெம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், நமது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் என்.சங்கா் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எம்.எஸ். தெய்வமணி முன்னிலையில், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

வந்தவாசி: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சாலை சந்திப்பு பகுதியிலிருந்து ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில், ஊா்வலமாக புறப்பட்ட திமுகவினா், தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் பகுதியை அடைந்தனா். ஊா்வலத்தின்போது, மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

இதில், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் ஆகியோா் பங்கேற்றனா்.

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்

ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா். பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான து... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு

வந்தவாசி அருகே விவசாயியை கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரகோத்தம்மன்(56). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்க்... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச... மேலும் பார்க்க

அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், நலத் திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத... மேலும் பார்க்க

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஆராதனை விழா நாளை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில், ஒவ்வொரு ஆண்டும்... மேலும் பார்க்க