9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.நவீன்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மும்மொழி கொள்கையை திணிக்க கூடாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ் மொழி வளா்ச்சிக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.