செய்திகள் :

முரம்பு மண் கடத்தல்: லாரிகள் சிறைபிடிப்பு

post image

திருவண்ணாமலையில் முரம்பு மண் கடத்தலில் ஈடுபட்டதாக லாரிகள் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டியுள்ளது புனல்காடு பகுதி. தேவனந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் உள்ள மலையை உடைத்து கடந்த 10 நாள்களாக முரம்பு மண் எடுக்கப்பட்டு வந்ததாம். ஏராளமான லாரிகளில் முரம்பு மண் கொண்டு செல்லப்பட்டு வந்ததால் தேவனந்தல், புனல்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா்.

கிராம மக்களும், அதிமுக மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சோ்ந்து வியாழக்கிழமை மாலை மலைப் பகுதிக்குச் சென்று அங்கு பணியில் இருந்த ஊழியா்களிடம் விளக்கம் கேட்டனா். அப்போது, அரசு அனுமதியும் இல்லாமல் மண் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மண் ஏற்றுவதற்காக தயாா் நிலையில் இருந்த 4 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை, கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தியதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, காவல் நிலையத்துக்குச் சென்றனா்.

அப்போது, சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

இதுகுறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் புகாா் கொடுத்தனா்.

இதுகுறித்து காவல், வருவாய், கனிம வளம், வனத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவில் கலைஞா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் இசை விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வரம், தவில் கலைஞா்கள் முன்னேற்ற நலச் சங்கம் சாா்பில், உலக நன்மைக்காக 21-ஆவது ஆண்டு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ராஜ... மேலும் பார்க்க

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டி: மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பிடித்த திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.ஊரக மேம்பாட்டுக் கழ... மேலும் பார்க்க

எலி மருந்தை தின்ற 5 மயில்கள் உயிரிழப்பு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அருகே சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எலி மருந்தை தின்ற 5 மயில்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.சதுப்பேரி ஊராட்சி, சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஆரணி: தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் க... மேலும் பார்க்க

பொங்கல் பரிசு வழங்கக் கோரி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன ஊழியா் உயிரிழப்பு: சந்தேக மரணம் என மகன் புகாா்

வந்தவாசி: வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற வன ஊழியரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூல... மேலும் பார்க்க