செய்திகள் :

முல்​லைப் பெரி​யாறு அணை விவ​கா​ரம்: மத்​திய அரசு மீது உச்​ச​நீ​தி​மன்​றம் அதி​ருப்தி

post image

​ந​மது நிரு​பர்

" நாடா​ளு​மன்​றத்​தால் இயற்​றப்​பட்ட அணைப் பாது​காப்​புச் சட்டம் இருந்​தும், நிர்​வா​கம் இன்​னும் நீண்ட தூக்​கத்​தி​லி​ருந்து மீள​வில்லை' என்று முல்​லைப் பெரி​யாறு அணை தொடர்​பான வழக்​கில் உச்​ச​நீ​தி​மன்​றம் புதன்​கி​ழமை தனது அதி​ருப்​தியை வெளிப்​ப​டுத்​தி​யது.

இது தொடர்​பான வழக்கு உச்​ச​நீ​தி​மன்​றத்​தில் நீதி​ப​தி​கள் சூர்ய காந்த், தீபாங்​கர் தத்தா மற்​றும் உஜ்​ஜல் புயான் ஆகி​யோர் அடங்​கிய அமர்வு முன் விசா​ர​ணைக்கு வந்​தது.

அப்​போது, 130 ஆண்​டு​கள் பழை​மை​யான இந்த அணை​யின் பாது​காப்பு தொடர்​பாக உச்​ச​நீ​தி​மன்​றத்​தில் நடந்து வரும் விசா​ரணை நட​வ​டிக்​கை​க​ளைத் தாம​தப்​ப​டுத்​தும் வகை​யில், 2021-ஆம் ஆண்டு அணை பாது​காப்​புச் சட்டத்தை மத்​திய அரசு இயற்​றி​ய​தா​க​வும், அப்​போ​தி​லி​ருந்து எது​வும் நடக்​க​வில்லை என்​றும் கேரள அர​சுத் தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டது.

அப்​போது, சட்டத்​தின் கீழ் பரிந்​து​ரைக்​கப்​பட்ட அணை​யின் பாது​காப்​புக்கு தேசி​யக் குழுவை மத்​திய அரசு இன்​னும் அமைக்​க​வில்லை என்று நீதி​ப​தி​கள் அமர்வு தெரி​வித்​த​னர்.

மேலும், அணைப் பாது​காப்​புச் சட்டத்தை நாடா​ளு​மன்​றம் இயற்​றிய போதி​லும், நிர்​வா​கம் இன்​னும் நீண்ட தூக்​கத்​தி​லி​ருந்து எழுந்து கொள்​ள​வில்லை என்​பதை அறிந்து நாங்​கள் வியப்​ப​டை​கி​றோம் என்று நீதி​ப​தி​கள் கூறி​னர்.

தமி​ழ​கம் சார்​பில் ஆஜ​ரான மூத்த வழக்​கு​ரை​ஞர் வி.கி​ருஷ்​ண​மூர்த்தி கூறு​கை​யில், "தொடர்​பு​டைய சட்டத்​தின் கீழ், அணை பாது​காப்பு ஆணை​யத்தை மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்​ளது. அணை​யின் கட்ட​மைப்பு குறித்து தணிக்கை செய்​யப்​பட உள்​ளது' என்​றார்.

அப்​போது நீதி​ப​தி​கள் கூறு​கை​யில், "அணைப் பாது​காப்​புச் சட்டத்​தின் பிரிவு 5(2)-இன் கீழ், பிரிவு 5(1)-இன் கீழ் பரிந்​து​ரைக்​கப்​பட்ட உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட தேசி​யக் குழு, இச்​சட்​டம் செயல்​ப​டத் தொடங்​கிய நாளி​லி​ருந்து 60 நாள்​க​ளுக்​குள் அமைக்​கப்​பட வேண்​டும். மேலும், அதன் பிறகு அக்​குழு ஒவ்​வொரு மூன்று வரு​டங்​க​ளுக்​கும் மீண்​டும் அமைக்​கப்​பட வேண்​டும்.

இத்​த​கைய தேசி​யக் குழு இது​வரை அமைக்​கப்​ப​ட​வில்லை என எங்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​ப​டு​கி​றது. மேலும், சம்​பந்​தப்​பட்ட தேசி​யக் குழு​வின் அர​சி​ய​ல​மைப்பு, அமைப்பு அல்​லது செயல்​பா​டு​கள் தொடர்​பான விதி​கள், விதி​மு​றை​கள் கூட வகுக்​கப்​ப​ட​வில்லை. இத​னால், இந்த விவ​கா​ரத்​தில் மத்​திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்​பப்​பட வேண்​டும். மேலும், இச்​சட்​டத்​தின் கீழ் தேசிய அணைப் பாது​காப்பு ஆணை​யத்​தின் பொறுப்பு தொடர்​பாக மத்​திய அர​சின் தலை​மைச் சட்ட ஆலோ​ச​கர், அந்த அமைப்​பி​ட​மி​ருந்து விவ​ரம் பெற்​றுத் தெரி​விக்க வேண்​டும்' என்​ற​னர்.

முன்​ன​தாக, "முல்​லைப்​பெ​ரி​யா​றில் தேக்​கி​வைக்​கப்​பட்​டுள்ள நீர், அணைக்கு சேதத்தை ஏற்​ப​டுத்​தி​னால் அணை​யின் கீழ்ப் பகு​தி​யில் வசிக்​கும் 50 முதல் 60 லட்சம் மக்​கள் பாதிக்​கப்​ப​டு​வார்​கள் என்​ப​தால், அணை​யின் பாது​காப்பு குறித்த உச்​ச​நீ​தி​மன்​றத்​தின் உத்​த​ரவை மறு​ஆய்வு செய்ய வேண்​டும்' என்று மனு​தா​ரர் மேத்​யூஸ் ஜெ. நெ​டும்​பாறை கோ​ரி​னார்.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க