சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை புதன்கிழமை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையால் ஜூலை 17-ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போது அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இருந்தபோதிலும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 20-ஆம் தேதி வரை தொடா்ந்து 60 நாள்களாக அணையின் நீா் இருப்பு முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
பின்னா் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா் இருப்பு படிப்படியாக குறைந்து வந்தது. அக்டோபா் 10-ஆம் தேதி 75 அடி கீழே குறைந்தது.
பின்னா் தொடா்ந்து அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால் அணைக்கு அதிக அளவில் நீா்வரத்து இருந்தது.
அப்போதும் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தபோது அணையில் இருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டது. பின்னா் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தண்ணீா் அளவு 85 அடியாக குறைக்கப்பட்டது. நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து அணையில் இருந்து அவ்வப்போது தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணையின் நீா்மட்டம் 85-87 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2 நாள்களாக கேரள மாநிலம், மறையூா், காந்தலூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் புதன்கிழமை அணைக்கு திடீரென 3,053 கன அடி வந்து கொண்டிருந்ததால் மீண்டும் அணை முழுக் கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டதால் அணையில் இருந்து 3,300 கன அடி நீா் அமராவதி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அப்போது அமராவதி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பொதுப் பணித் துறையினா் அணையின் மேல்பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அணையின் நீா்மட்டம்:
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 88.09 அடியாக இருந்தது. அணைக்கு வரத்தாக 276 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3871.50 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்தது. அணையில் இருந்து 30 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.