செய்திகள் :

முஸ்லிம்களின் மத உரிமையைப் பறிக்கும் வக்ஃப் திருத்த மசோதா: முதல்வர் ஸ்டாலின்

post image

முஸ்லிம் மக்களின் மத உரிமையை பறிக்கும் விதமாக வக்ஃப் திருத்த மசோதா இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

”வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்தியா. பல்வேறு மதங்கள், மொழிகள் உடைய இந்திய நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இந்த உணர்வுடன் செயல்பட வேண்டும். ஆனால், பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் திட்டத்தை தீட்டுகிறார்கள். குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் மக்களையும், இலங்கை தமிழர்களையும் பாதித்தது.

பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடியால் வஞ்சிக்கிறது. நீட், தேசிய கல்விக் கொள்கை அடிப்பட்ட மக்களை பாதிக்கிறது. இந்த வகையில் வக்ஃப் சட்ட மசோதா சிறுபான்மை மக்களை வஞ்சிக்கிறது. இதற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

வக்ஃப் சட்டமானது முதல்முதலில் 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் 1995, 2013 ஆண்டுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பாஜக அரசு திருத்த மசோதா தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் வாரியத்தில் அரசியல் தலையீடு, மத உரிமைகள் பாதிக்கும் விதத்தில் இருந்ததால் திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்தது. இதனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

வக்ஃப் சட்டத் திருத்தம் மூலம் மத்திய, மாநில வக்ஃப் வாரியத்தின் நிர்வாகத்தில் அரசின் அதிகாரம் அதிகரிக்கும். இது வக்ஃப் வாரியத்தின் சுயாட்சியை பாதிக்கும். வக்ஃப் வாரிய சொத்துகளின் நிலத்தை அளவிடும் அதிகாரம் நில அளவை ஆணையரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வக்ஃப் வாரியத்தின் முடிவு செய்யும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட சொத்துகள் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாக இருந்தாலும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு வக்ஃப் சொத்துகளை மறுவரையறை செய்யும் அதிகாரம் அளிக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களால் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் வாரியங்களை கலைக்க அதிகாரம் அளிக்கிறது. குறிப்பிட்ட இரண்டு தரப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்க சட்டம் வழிவகுக்கிறது. வக்ஃப் வாரியம் பதிவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் சரிபார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பிரிவின் 26 இன் கீழ் மதச் சுதந்திரம் மீறப்படுகிறது.

சிறுபான்மை முஸ்லிம் மக்களின் மத உரிமையை பறிக்கும் விதமாக இருக்கிறது. திமுக மட்டுமின்றி நாட்டின் முக்கிய கட்சிகள் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது. இந்த திருத்த சட்டங்கள் வக்ஃப் வாரியத்தையே எதிர்காலத்தில் செயல்படவிடாமல் ஏற்படுத்தும்.இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான நிலைபாட்டை தெரிவித்து உரையாற்றி வருகின்றனர்.

இதையும் படிக்க : வல்லபபாய் படேலின் மறு உருவம் அமித் ஷா! -ஆர்.பி. உதயகுமார்

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க