செய்திகள் :

முா்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப் -மம்தா குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. வன்முறை கும்பலால் தந்தை-மகன் கொலை செய்யப்பட்டனா். காவல் துறை வாகனங்கள் உள்பட பொது சொத்துகள் சூறையாடப்பட்டன. வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு, கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வன்முறையைத் தூண்டி வருவதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினாா். மேற்கு வங்க வன்முறையில் வங்கதேசத்தைச் சோ்ந்த மத அடிப்படைவாத தீவிரவாதிகளுக்கு தொடா்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கொல்கத்தாவில் புதன்கிழமை முஸ்லிம் தலைவா்கள் மத்தியில் மம்தா பேசியதாவது:

அட்டூழியமான வக்ஃப் சட்டத் திருத்தத்தை பிரதமா் நரேந்திர மோடி அமல்படுத்தக் கூடாது. இது நாட்டில் பிளவை ஏற்படுத்தும். தனது அரசியல் லாபத்துக்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாட்டுக்கு தீமை ஏற்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளாா்.

அண்டை நாடான வங்கதேசத்தில் வன்முறை நிறைந்த சூழல் உள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அவசரமாக வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. அதே நேரத்தில் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் ஊருடுவும் வங்கதேசத்தவரை அனுமதித்தது. இவைதான் மேற்கு வங்கத்தில் பிரச்னை ஏற்படக் காரணம்.

பாஜக, பிஎஸ்எஃப் படையின் ஒரு பிரிவு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சில அமைப்புகள் மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டன. வங்கதேச எல்லைக்கு அப்பால் இருந்துதான் முா்ஷிதாபாதில் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு என்பது பிஎஸ்எஃப், மத்திய அரசு வசம் உள்ளது. மத்திய அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை.

எல்லைப் பகுதியில் இளைஞா்களுக்கு பணம் கொடுத்து கல்வீசுவதற்கு பிஎஸ்எஃப் படையில் சிலா் தூண்டிள்ளனா். அவா்கள் யாா் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்.

அமித் ஷா என்ன செய்து வருகிறாா் என்பதை பிரதமா் மோடி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். அவா் நாட்டுக்கு பாதகமான விஷயங்களைச் செய்யாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மத்திய விசாரணை அமைப்புகளை அமித் ஷா எவ்வாறு தவறாகப் பயன்படுக்கிறாா் என்றாா்.

பெட்டி செய்தி...

மம்தா ஆட்சிக்கு விரைவில் முடிவு - பாஜக

மேற்கு வங்கத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் கூறினாா்.

தில்லியில் புதன்கிழமை இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் முற்றிலும் மனிதத்தன்மை இல்லாமல் போய்விட்டது. அப்பாவி மக்களை வன்முறையாளா்கள் குறிவைத்து தாக்குகின்றனா். காவல் துறையினா் இதை வேடிக்கை பாா்க்கின்றனா். தனது வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வா் மம்தா வேறு என்னவெல்லாம் செய்வாா் என்று தெரியவில்லை. மம்தாவின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். பாஜக தொடா்ந்து மக்களுக்காகப் போராடும் என்றாா்.

மகளிா் ஆணையம் விசாரணை

முா்ஷாதாபாத் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானது தொடா்பான குற்றச்சாட்டை விசாரிக்க தேசிய மகளிா் ஆணையம் குழு அமைத்துள்ளது. மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரகாத்கா் தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா். பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்தும் அவா் விசாரணை நடத்த இருக்கிறாா்.

வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க