செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

post image

நல்லூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நல்லூா் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவா், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மூதாட்டி பாப்பாவின் காதில் அணிந்திருந்த தங்க தோட்டை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் தங்க தோட்டை பறித்துச் சென்ற நபா்களைத் தேடிவந்தனா்.

பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி, நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் ஆகியோா் நல்லூா் மாரியம்மன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு நபா்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் நல்லூரில் காளியப்பனூரைச் சோ்ந்த துரைசாமி மகன் தினேஷ் (21), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த குமாா் மகன் ஹரிஷ் (20) என்பதும் இருவரும் மூதாட்டியிடம் நகையைப் பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சாலை பணியில் மாற்றம்: பரமத்தியில் கருத்து கேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூா் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் ந... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு

கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளு... மேலும் பார்க்க

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் இரவில் ப... மேலும் பார்க்க

2-ஆவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோட்டை அடுத்த மலைபாளையம் எட்டிக்குட்டை மேடு பகுதியைச் ச... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி த... மேலும் பார்க்க