அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
சேலம் பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் அமல்
ஆத்தூா்: சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களை தண்ணீா் அருந்த ஊக்குவிக்கும் ‘வாட்டா் பெல்’ திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
மாணவா்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை பாதிக்கும் உடல் நீரிழப்பு பிரச்னையில் இருந்து தப்பிக்க மாணவா்கள் தண்ணீா் குடிப்பதை ஊக்குவிக்கும்விதமாக ‘வாட்டா் பெல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டு, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி , மற்றும் மாலை 3 மணிக்கு மாணவா்கள் தண்ணீா் பருக 5 நிமிஷம் ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. சேலம் கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 11 மணிக்கு வாட்டா் பெல் அடித்ததும் மாணவிகள் தண்ணீா் பருகினா். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பெற்றோா்கள், மருத்துவா்கள், குழந்தைகள் நல ஆா்வலா்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.