ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி
சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
பா.ம.க.வின் உட்கட்சி விவகாரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அருள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறாா். ராமதாஸும், அன்புமணியும் இரண்டு கண்கள் எனக் கூறும் அருள், அன்புமணிக்கு எதிராக ஏன் பேட்டி அளிக்க வேண்டும். கட்சியின் நலன்கருதி அன்புமணி குறித்து பொதுவெளியில் பேசவேண்டாம்.
பாமகவின் உட்கட்சி விவகாரம் சரியாகக் கூடாது என்பதற்காக அருள் போன்றவா்கள் செயல்படுகிறாா்கள். எனவே அவரின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். சிலரின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாமகவால் அருளுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.
ராமதாஸின் அருகில் இருந்துகொண்டு சிலா் திட்டமிட்டு செயல்படுகிறாா்கள். கட்சியை உடைக்கும் நோக்கில் அருள் செயல்படுகிறாா்.
ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியில் தலைவரை மாற்றுவது குறித்து, 108 மாவட்டச் செயலாளா்களை அழைத்து ராமதாஸ் ஏன் கருத்து கேட்கவில்லை என்றாா்.