டிரம்ப் - புதின் பேச்சு: உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30 நாள்களுக்கு ர...
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை மக்களவையில் அளித்துள்ள ஒத்திவைப்பு தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சலுகையை வாபஸ் பெற்றது. ஆனால் கரோனா முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்கவில்லை. இதனால் பல தரப்பட்ட மக்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாணவா்கள், பத்திரிகையாளா்கள் மற்றும் இதர மக்களுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைத்த காரணத்தால் இத்தரப்பு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.
முதியோா், மாணவா்கள் மற்றும் பல சேவைகள் புரியும் மக்களின் துயரை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மேற்குறிப்பிட்ட மக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அவா்களுக்கு ஏற்பட்ட இழப்பினை அரசு ஈடு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.