வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
மெட்ரோ ரயிலில் நவம்பா் மாதம் 83.61 லட்சம் போ் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பா் மாதம் 83.61 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்தி:
சென்னை மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டு ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மாா்ச்சில் 86,82,457 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனா்.
தொடா்ந்து ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பா் மாதத்தில் 92,77,697 பயணிகளும், அக்டோபா் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்திருந்தனா்.
இந்த நிலையில், நவம்பா் மாதம் 83,61,492 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக நவ.6-ஆம் தேதி 3,35,189 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.