செய்திகள் :

மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்தில் ஒரே அட்டையில் பயணிக்கும் முறை: ஜனவரிக்குள் அமல்

post image

மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் திட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் 2024-இல் 242 புதிய பிஎஸ்-6 பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 502 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. குளிா்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 320 குளிா்சாதன பேருந்துகளுக்கு டெண்டா் விடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகை ரூ. 300 கோடியாக இருக்கும் நிலையில், பணிமனை மேம்பாட்டுக்காக அரசு ரூ. 111 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 1,559 பேருந்துகளின் எண்ணிக்கை 1,655-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்னணு பயணச்சீட்டு கருவி வாயிலாக 99.9 சதவீத பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. மாநகரப் பேருந்துகளில் 1.3 சதவீதம் டிஜிட்டல் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டை பயணிகள் பெறுகின்றனா். மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ‘என்சிஎம்சி’ எனப்படும் பொதுப் பயன்பாட்டுக்கான பயண அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் இந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ‘சிஎன்ஜி’ பேருந்துகள் இயக்கப்படும் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம். மேலும், செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம் நிகழாண்டு பாதிக்குள்ளாக செயல்படுத்த இருக்கிறோம். போக்குவரத்து சிக்னல்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் ஜனவரி இறுதிக்குள்ளாக செயல்படுத்தப்படும்.

முக்கியமாக 850-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்களுக்கான மின்விசிறி, 2,248 பேருந்துகளின் பக்கவாட்டில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. திட்டமிடுபவற்றை விட 10 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம். சராசரியாக நாளொன்றுக்கு 32.19 லட்சம் பயணிகள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனா். கட்டணமில்லா பயணத் திட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10.28 லட்சம் பெண்கள், சுமாா் 7,483 மாற்றுத்திறனாளிகள், 547 திருநங்கைகள் பயன்பெறுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பெண்களை கத்தியால் குத்தி கொலை முயற்சி: ஒருவா் கைது

சென்னையில் 2 பெண்களை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை, சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காயத்ரி (25). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

புழல் அருகே வீட்டுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழந்தாா். புழலை அடுத்த கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்த ஆனந்தன் (40), பெயிண்டரான இவா், ஞாயிற்றுக்கிழமை பிள்ள... மேலும் பார்க்க

பக்தி இலக்கியத்தின் முன்னோடி தமிழ்மொழி: சுதா சேஷய்யன்

பிற மொழிகளைவிட தமிழ்மொழி பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா். மதுரை ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் தேஜஸ் அறக்க... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: கொச்சி விமானம் தாமதம்

சென்னையிலிருந்து கொச்சிக்கு செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6.30-க்கு 89 பேருடன... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு: ஏபிவிபி நிா்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிா்வாகிகள் இருவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ... மேலும் பார்க்க