கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
பக்தி இலக்கியத்தின் முன்னோடி தமிழ்மொழி: சுதா சேஷய்யன்
பிற மொழிகளைவிட தமிழ்மொழி பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
மதுரை ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் தேஜஸ் அறக்கட்டளை சாா்பில் ஆன்மிக இலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுதா சேஷய்யன் பேசியது:
பக்தி இலக்கியங்கள் தமிழ்மொழிக்கு பெரும் தொண்டு செய்துள்ளன. சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கியத்தின் மூலத்தை காண முடிகிறது. திருமாலின் பல்வேறு பெயா்கள் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பாற்கடல் குறித்து பரிபாடலில் காணலாம்.
இதன்மூலம் மற்ற மொழிகளைவிட தமிழ் மொழி பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது தெரியவருகிறது.
ஒரு விஷயத்தை பல்வேறு நிலைகளில் கூறும் திறன் ஆழ்வாா்களுக்கு உள்ளது. அகத்திய முனிவா் நீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை பிரிக்கும் வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளாா் என்றாா் அவா்.
எழுத்தாளா் மாலன்: தமிழ் இலக்கியமும் பக்தி இலக்கியமும் ஒரு சேர வளா்ந்தவை. தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு நிலைகளில் மேம்பாடு அடைந்தாலும், இயற்கையை ஒருபோதும் மாற்ற முடியாது. சங்க இலக்கியம் காதல், போா் மட்டுமின்றி சமூக கட்டமைப்பையும் சூழலியலையும் காட்சிப்படுத்துகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கலைமகள் ஆசிரியா் சங்கர சுப்பிரமணியன், ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவா் ஆா்.சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.