பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!
இரு பெண்களை கத்தியால் குத்தி கொலை முயற்சி: ஒருவா் கைது
சென்னையில் 2 பெண்களை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டையாா்பேட்டை, சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காயத்ரி (25). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உறவினரான சரண்யாவுடன் நின்று பேசிக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சேகா், அவரது மகன் காா்த்திக் மற்றும் நண்பா் சதீஸ்குமாா் (எ) சோசன் ஆகியோா், முன்விரோதம் காரணமாக காயத்ரியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், தாங்கள் வைத்திருந்த கத்தியால் காயத்ரி மற்றும் சரண்யாவை குத்திவிட்டு தப்பிச் சென்ாகத் தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்த புகாரின்பேரில் ஆா்.கே. நகா் போலீஸாா் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள சேகா், சதீஸ்குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.