மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 17) காலை வினாடிக்கு 7148 கன அடியிலிருந்து வினாடிக்கு 7368 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 118. 21அடியிலிருந்து 118.53 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 91.14 டிஎம்சியாக உள்ளது.