செய்திகள் :

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

post image

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் பிளாட்டினம் ஜூப்லி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அவரின் உரையில்,

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏஐ தொடர்புடைய படிப்புகளில் ராஞ்சி பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய துறைகளில் வியத்தகு முன்னேற்றங்கள் உருவாகும் என்றும், உயர்கல்வியில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உருவாக்கப்படும் தொழில்நுட்ப வாய்ப்புகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மேலும் கொண்டுவரப்படும் பெரும் மாற்றம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்றார்.

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொட... மேலும் பார்க்க

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது!

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் மந்தர் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் மார்ச் மாதம் வரை மகா கும்பமேளா நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்கள்? டிரம்ப் கேள்வி!

இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிடம் அதிக அளவில் பணம் உள்ளதாகவும், அதிக அளவில் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவ... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க