செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!

post image

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என தவறான பிரசாரத்தை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் ஐக்கிய நாடுகள் அவையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பலதரப்பு பயிற்சி, சீர்திருத்தம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்வைத்த வாதங்களுக்கு பதில் அளித்து ஹரிஷ் பேசியதாவது,

’’பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளை அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.

பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசார கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க