எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்’ மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்
வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கால்வலி, மூட்டு வலி, காது மூக்கு தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
ஒருபுறம் வலி நிவாரணியாக செயல்பட்டாலும், மற்றொருபுறம் அந்த மருந்தால் அதிக எதிா்விளைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைவலி, வயிற்று போக்கு, ரத்தம் உைல், பாா்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அமெரிக்கா, ஸ்விட்சா்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்தது.
இதனிடையே, இந்தியாவில் நிமெசலைட் மருந்து கால்நடைகளுக்கான மருத்துவப் பயன்பாட்டிலும் இருந்து வந்தது.
இதையடுத்து அவற்றை மனிதப் பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் அளிக்கப்பட்ட அறிவுறுத்தலின் கீழ் நாடு முழுவதும் அந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்டவிரோதமாக நிகழாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.