தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? சீமான் கேள்வி!
சென்னை மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதனை மாற்ற வேண்டும் எனவும் மேயர் பிரியா கூறியிருக்கிறார். தங்கை பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா?
முதலில் தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுங்கள், 5 நிமிடம் பேசுங்கள். உங்கள்(திமுக) பள்ளிகளில் ஹிந்தி பாட மொழியாக இருக்கிறதா இல்லையா? ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறதா இல்லையா? தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற முயற்சியை நிறுத்துங்கள்.