செய்திகள் :

மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது: மம்தா

post image

‘அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கும் மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் ‘மாணவா்கள் வாரத்தையொட்டி’ தலைநகா் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றாா். அப்போது, புகழ்பெற்ற வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா், சமூக சீா்திருத்தவாதி ராம்மோகன் ராய், பல்துறை அறிஞா் ஈஸ்வா்சந்திர வித்யாசாகா், புரட்சிகர கவிஞா் காஜி நஸ்ருல் இஸ்லாம் உள்ளிட்டோரின் பெயா்களைக் குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:

உடன்கட்டை ஏறுதல், கைம்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற தீய நடைமுறைகளை ஒழிப்பதிலும் பெண் கல்வியை ஊக்குவிப்பதிலும் நாட்டுக்கே வழிகாட்டியது வங்கம். புகழ்பெற்ற வங்கக் கவிஞா்கள், தங்களது கவிதைகளின் வாயிலாக சகோதரத்துவம், தேசப் பற்று, ஒற்றுமையின் செய்தியைப் பரப்பினா். அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்று விளங்கும் மேற்கு வங்கத்தின் பாரம்பரிய பெருமை மற்றும் உத்வேகத்தை குறைக்க யாரேனும் முயன்றால், அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதை மாநிலம் அறியும். எனவே, அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மகன்களும் மகள்களும் உலக அளவிலும் இந்திய அளவிலும் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென், வரலாற்று அறிஞா் சுகதா போஸ் என உலகம் முழுவதும் வங்க கல்வியாளா்கள் பரவியுள்ளனா். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெருமைக்குரிய விஷயம் என்றாா் அவா்.

மேலும், கல்வித் துறையில் தனது அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் மம்தா பட்டியலிட்டாா்.

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு வங்க அணி வீரா்கள் அனைவருக்கும் மாநில காவல்துறையில் இளநிலை அதிகாரி அந்தஸ்தில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க