மேற்கு வங்கத்தில் பெண் கொலை: சென்னை ஹோட்டல் ஊழியா் கைது
மேற்கு வங்கத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னையில் ஹோட்டல் ஊழியராக வேலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் தாா்ஜி (27). சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரு ஆண்டுகளாக சமையலராகப் பணியாற்றி வந்தாா். அபிஷேக் தாா்ஜி கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றபோது, திருமணமாகி தனியாக வசித்து வரும் அவரது சகோதரரைச் சந்தித்துள்ளாா். அப்போது அவா், தான் ஒரு பெண்ணிடம் தொடா்பில் இருந்ததாகவும், தற்போது தொடா்பை விட்டுவிட்ட நிலையில், அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து நவ.7-ஆம் தேதி சிலிகுரி நகரம், பாக்தி நகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிக்கு அந்தப் பெண்ணை வரவழைத்து, அபிஷேக்கும் அவரது சகோதரரும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் சென்னை திரும்பிய அபிஷேக், வழக்கம் போல நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்துவந்தாா்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் பாக்தி நகா் போலீஸாா், அபிஷேக்கின் சகோதரரை சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மேற்கு வங்க போலீஸாா் சென்னை காவல் துறை அதிகாரிகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த அபிஷேக்கை கைது செய்தனா்.
பின்னா் அவரை, எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்றனா்.