செய்திகள் :

மேற்கு வங்கம்: டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 17 பேர் பலி!

post image

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார். நிலச்சரிவு காரணமாக மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிக்கிம் நாட்டின் இதர பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டார்ஜிலிங்கில் சுற்றுலா மையங்களை இணைக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டு இருந்த இரும்பு பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. துர்கா பூஜைக்கு பிறகு அதிகமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சுற்றுலா சென்றுள்ளனர். நிலச்சரிவு காரணமாக அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிர்வாகம் தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் வர தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

மினி ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்குப்பகுதியில் உள்ள ஜல்பைகுரி, சிலிகுரி போன்ற இடங்களில் மழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டார்ஜிலிங்கில் ஆறுகள் அனைத்தும் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீ... மேலும் பார்க்க

வானிலை: `இடி மின்னலுடன் கூடிய மழை' - எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீவேகத்தில் த... மேலும் பார்க்க

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும்? - வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாட்டில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன... மேலும் பார்க்க

Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்?

மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி வரை மழை! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையத்தின் அப்டேட்

சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் என்ன குறிப்பிட்டுள்ளது? இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்ன... மேலும் பார்க்க