மேற்கு வங்கம்: ரிக்ஷாக்கள் மீது காா் மோதியதில் 7 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்
மேற்கு வங்கத்தில் பேட்டரி ரிக்ஷாக்கள் மீது காா் மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.
நாடியா மாவட்டத்தின் சாப்ரா பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த விபத்து நேரிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். விபத்தில் சிக்கியவா்கள் அனைவரும், ரமலான் பண்டிகைக்காக பொருள்கள் வாங்கிவிட்டு, 3 பேட்டரி ரிக்ஷாக்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவா்கள் ஆவா். அவா்கள் பயணித்த ரிக்ஷாக்கள் மீது அதிவேகமாக இயக்கப்பட்ட சொகுசு காா் அடுத்தடுத்து மோதியது. இதில், ரிக்ஷாக்களில் இருந்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 8 போ், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுநா், நிகழ்விடத்தில் இருந்து தப்பியோடிவிட்டாா். அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.