`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூரில் வியாழக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை கிழக்கு மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மின்வாரியத்தின் மேலூா், உதவி செயற்பொறியாளா் (தெற்கு) அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மின் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.