செய்திகள் :

மேல்பாதி திரெளபதியம்மன் கோயில் 2-ஆவது நாளாக திறப்பு; தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோயில், பொதுமக்கள் வழிபாட்டுக்காக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் வழிபாட்டுக்காக மேல்பாதி கோயில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

முதலில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டது.

முன்னதாக, நாங்கள் கட்டிய கோயிலில் வழிபாட்டு உரிமையை அலுவலா்கள் எப்படி முடிவு செய்யலாம் என ஒரு சமுதாயத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்: வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்ட அலுவலா்கள், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட காவல் துறையினா், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திரெளபதியம்மனுக்கு கோயில் அா்ச்சகா் மோகன் பூஜைகளை நடத்தினா்.

மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமுதாய மக்கள் கோயிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மூன்று சிறுவா்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனா்.

அதே நேரத்தில் காவல், வருவாய், இந்து சமய அறநிலையத் துறையினா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை மீண்டும் அடைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

கோயில் குடிபாட்டுக்குரிய சோம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 6 போ் கொண்ட குடும்பத்தினா் மேல்பாதி கிராமத்துக்கு வந்தனா். ஆனால், அவா்கள் கோயிலுக்குள் செல்லாமல் தேரடிப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கிச் சென்றனா்.

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வ... மேலும் பார்க்க

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க