திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகின்றன. இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி டேரன் சமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோமன் பவல் 54 ரன்கள்(3 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார். அவரைத் தொடர்ந்து ரோமாரியோ 30 ரன்களும், அல்ஜாரி ஜோசப் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி, ஷாகிப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர், 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது.
இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் 41 ரன்களும், லியம் லிவிங்ஸ்டன் 39 ரன்களும், வில் ஜாக்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அகேல் ஹொசைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்தின் ஷகிப் மமூத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி வருகிற நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.