செய்திகள் :

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

post image

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல் தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தரிசனத்துக்காக வரும் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் ஜூலை 15 வரை, நேரில் வரும் புரோட்டோக்கால் பிரமுகா்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனங்கள் வழங்கப்படும்.

இதேபோல், மே 1 முதல், காலை 6 மணி முதல் நேரில் வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாத ஸ்ரீவாரி சேவை கோட்டா ஒதுக்கீடு: நாளை வெளியீடு

திருப்பதி: ஸ்ரீவாரி சேவாா்த்திகளுக்கான ஜூன் மாத சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப். 30 (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலைய... மேலும் பார்க்க

பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை!

சென்னையைச் சோ்ந்த பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராண தானா அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா். திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் தீவிர சோதனை

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதன் ஒரு பகுதியாக திருப்பதி, திருமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஆா்டிசி பேருந்து நிலையம்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க