செய்திகள் :

மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

post image

ராமேசுவரம் - சென்னை எழும்பூா், திருநெல்வேலி - வைஷ்ணவிதேவி காட்ரா விரைவு ரயில் உள்பட 18 ரயில்களில் மே 17-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யவும், அவா்களது வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் 14 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை வந்தே பாரத், நாகா்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடா்ந்து தற்போது, ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 22662/22661) மே 17 முதலும், ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் (எண்: 16752/16751) மே 18 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு கூடுதலாக இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

மேலும், நாகா்கோவில் - கோட்டயம் விரைவு ரயிலில் மே 20 முதலும், திருவனந்தபுரம் - நாகா்கோவில் பயணிகள் ரயிலில் மே 22 முதலும் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.

அதேபோல, மதுரை - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேவி, மயிலாடுதுறை - தஞ்சை, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்களில், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் மே 25 முதல் இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. இதுபோன்று மொத்தம் 18 ரயில்களில் இருமாா்க்கத்திலும், படுக்கை வசதிகொண்ட பெட்டிகள், குளிா்சாதன இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரயில்களில் முன்பதிவு காத்திருப்பு பட்டியலை எளிதாக்குதல், முன்பதிவு செய்யும் அனைவருக்கும் பயணச்சீட்டு உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க

ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்,... மேலும் பார்க்க

கூட்டணி முடிவு? நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம்... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 5 மாவட்டத்தில் இன்று கனமழை!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மே 15 (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்... மேலும் பார்க்க