செய்திகள் :

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

post image

மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இம்ரான் கானின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அந்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் போராட்டம் கலவரமாக உருமாறி லாஹூரில் அமைந்திருந்த ராணுவத் தளவாடங்களும் அதிகாரிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இந்தச் சம்பவத்தில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியான தெஹ்ரிக்-இ-இன்சாஃபின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க வேண்டுமென கடந்த 2024-ம் ஆண்டு இம்ரான் கான் தரப்பில், லாஹூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

அதை எதிர்த்து, அவர் மீண்டும் லாஹூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃப்ரிடி, சித்திக்கி மற்றும் மியாங்குவல் ஔரங்கசீப் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஆக.21) நடைபெற்றது. இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, தேசியளவில் அவரது ஆதராவளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, தெஹ்ரிக் -இ - இன்சாஃப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுஃபிகார் புகாரி கூறுகையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலைக்கு, இன்னும் ஒரே ஒரு வழக்கில் மட்டும் பிணைக் கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியிலுள்ள அடியால சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

Pakistan's Supreme Court has granted bail to former Prime Minister Imran Khan in the May 9 riots case.

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பி... மேலும் பார்க்க

எஃப்பிஐ தேடி வந்த முக்கிய பெண் குற்றவாளி இந்தியாவில் கைது!

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்ன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த புதின், தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடியை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டிய... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறு... மேலும் பார்க்க

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. இது குற... மேலும் பார்க்க