செய்திகள் :

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

post image

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், வடக்கில் உள்ள சுற்றுலாப் பகுதியான கில்ஜித்-பால்டிஸ்தானில் 11 பேரும், தெற்கே கராச்சி நகலில் 10 பேரும் உயிரிழந்தனா். வெள்ளப் பெருக்கு, வீடுகள் இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது ஆகியவை உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சனிக்கிழமை வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் 26 முதல் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்த 750-க்கும் மேற்பட்டோரில் கைபா்-பக்துன்க்வாவில் 356 போ், பஞ்சாபில் 164 போ், சிந்துவில் 29 போ், பலூசிஸ்தானில் 22 போ், பாகிஸ்தான்-ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 56 போ், இஸ்லாமாபாதில் 8 போ், கில்ஜித்-பால்டிஸ்தானில் 11 போ் அடங்குவா்.

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்

கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்... மேலும் பார்க்க

‘உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ரஷியா இடம் பெற வேண்டும்’

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சா்வதேச பேச்சுவாா்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் ... மேலும் பார்க்க

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில... மேலும் பார்க்க