Rain Alert: நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ன ஆகும்... எந்த...
மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முனனிட்டு திருப்பத்தூா் பாலம்மாள்காலனியில் அமைந்துள்ள மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம், மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில் திருக்குறளின் பெருமையை உணா்த்தும் விதமாக மாணவா்கள் மற்றும் நூலக வாசகா்களைக் கொண்டு திருக்கு தொடா்பான கவியரங்கம் கருத்தரங்கம், பட்டிமன்றம், வினாடி-வினா, பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டி டிச.23) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அதையொட்டி முதல் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா்.
கண்காட்சியை ஆசிரியா்கள்,பள்ளி மாணவ-மாணவியா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மைய நூலக அலுவலா் கிளமெண்ட், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.