மோசமான வானிலை: தில்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் காரணமாக குறைந்த தெரிவுநிலை காணப்பட்டது. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியது. ஆனால் இதுவரை எந்த விமானமும் திசை திருப்பப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
பயணிகள் புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்குத் தொடர்புடைய விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மூடுபனி சற்று விலகும்போது மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.